புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழா இன்று(மே28) நடைபெறுகிறது. இதனையடுத்து, டில்லி ஜந்தர் மந்தரில் இருந்து, புதிய பார்லிமென்ட் நோக்கி, பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் தடுத்து, நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சில தினங்களாக, இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டில், நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.