புதிய பார்லிமென்டை பிரதமர் திறப்பதில் மகிழ்ச்சி: ஜனாதிபதி
புதிய பார்லிமென்டை பிரதமர் திறப்பதில் மகிழ்ச்சி: ஜனாதிபதி

புதிய பார்லிமென்டை பிரதமர் திறப்பதில் மகிழ்ச்சி: ஜனாதிபதி

Updated : மே 28, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் 2ம் கட்ட நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரின் உரை வாசிக்கப்பட்டது. இதனை ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ் வாசித்தார். அதில் இடம்பெற்ற ஜக்தீப் தங்கரின் உரை: புதிய பார்லிமென்ட் கட்டடம் இந்தியாவிற்கு பெருமை. இந்திய பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இணைந்த கலவையாக புதிய
I am very happy that PM Modi is inaugurating the new Parliament: Presidents messageபுதிய பார்லிமென்டை பிரதமர் திறப்பதில் மகிழ்ச்சி: ஜனாதிபதி

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் 2ம் கட்ட நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரின் உரை வாசிக்கப்பட்டது. இதனை ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ் வாசித்தார்.



அதில் இடம்பெற்ற ஜக்தீப் தங்கரின் உரை:


புதிய பார்லிமென்ட் கட்டடம் இந்தியாவிற்கு பெருமை. இந்திய பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இணைந்த கலவையாக புதிய பார்லிமென்ட் உள்ளது.




ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரை


நமது ஜனநாயக பயணத்தில் புதிய பார்லிமென்ட் ஒரு படிக்கட்டு. இது நமது நாட்டின் லட்சியத்திற்கும், பெருமைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. புதிய பார்லிமென்ட்டை பிரதமர் திறந்து வைப்பது மகிழ்ச்சி. ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது என்பதை புதிய பார்லிமென்ட் கட்டடம் வெளிப்படுத்துகிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் தருணம் இது.



வரவேற்புரை


முன்னதாக, ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ் ஆற்றிய வரவேற்புரை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2.5 ஆண்டுகளுக்கும் குறைவான நாட்களில் புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கு இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். இந்நாள் அமிர்த காலத்திற்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. இக்கட்டடம், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. பாரம்பரிய முறைப்படி நவீன வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

Sridharan Venkatraman - Tiruchirappalli,இந்தியா
28-மே-202319:45:30 IST Report Abuse
Sridharan Venkatraman மோடிக்கு ஒரு சிறு மாலை கூட ேபாடவில்லை.
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
28-மே-202316:29:34 IST Report Abuse
Ambika. K இது 100 அல்ல அதற்கு மேல் வாஸ்து ஆசி உள்ள கட்டடம். துவங்கும் போதே 20 தீய சக்திகள் விரட்டி அடிக்க பட்டுள்ளதே. நல்லது. மிக நல்லது.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
28-மே-202314:58:47 IST Report Abuse
Siva ஆவினுக்கே பால் ஊற்றிய திராவிட மாடல் இதில் கலந்து கொள்ள கொடுத்து வைக்கவில்லை.. இனி வரும் சந்ததி இவர்கள் வம்சத்தை எப்படி விமர்சனம் செய்வர் என்று நினைக்கும் அறிவு இல்லை.. தமிழனுக்கு செய்த துரோகம் முதல்வர் தூக்கம் இல்லாமல்... திரிகிறார்.. பாரத மாதாவுக்கு செய்த துரோகம் இனி வரும் காலங்களில் தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X