மே மாதத்தில் 37 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள்!
மே மாதத்தில் 37 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள்!

மே மாதத்தில் 37 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள்!

Updated : மே 28, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) மே மாதத்தில் இதுவரை இந்திய பங்குகளில் ரூ. 37,316 கோடியை குவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்களின் அதிகபட்ச முதலீடு இதுவாகும். இதற்கு முன், அவர்கள் நவம்பர் 2022ல் ரூ.36,239 கோடி நிகர முதலீடு செய்திருந்தனர்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரூ.34,000 கோடிக்கு மேல் முதலீடுகளை
Foreign companies have invested 37 thousand crore rupees in May!  மே மாதத்தில் 37 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள்!

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) மே மாதத்தில் இதுவரை இந்திய பங்குகளில் ரூ. 37,316 கோடியை குவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்களின் அதிகபட்ச முதலீடு இதுவாகும். இதற்கு முன், அவர்கள் நவம்பர் 2022ல் ரூ.36,239 கோடி நிகர முதலீடு செய்திருந்தனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரூ.34,000 கோடிக்கு மேல் முதலீடுகளை திரும்பப் பெற்றிருந்தனர். மார்ச்சில் இருந்து வாங்க துவங்கினர். பங்குப் பத்திரங்கள் வைப்பு நிறுவனத்தின் தரவுகள் படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் ரூ.7,936 கோடியும், ஏப்ரலில் ரூ.11,630 கோடியும் முதலீடு செய்தனர். முக்கியமாக மார்ச் மாதத்தில் அதானி குழும நிறுவனங்கள் ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிவைச் சந்தித்திருந்தன. அச்சமயத்தில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜி.க்யூ.ஜி., பார்ட்னர்ஸ் மொத்தமாக முதலீடு செய்தது.


latest tamil news


இந்நிலையில் மே 2 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் 37,316 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடுகள் வலுவான உள்நாட்டு பொருளாதார நிலைமை, இந்திய பங்குகளின் விலை நியாயமான மதிப்பீடுகளில் இருந்தது மற்றும் நிறுவனங்களின் நல்ல காலாண்டு முடிவுகள் ஆகியவற்றால் வந்துள்ளன என்று நிபுணர்கள் கூறினர்.

மேலும் இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​​அமெரிக்கா வட்டி விகித உயர்வை நிறைவு செய்திருப்பது மற்றும் நல்ல உள்நாட்டு மேக்ரோ-பொருளாதாரத் தரவுகள் ஆகியவை சந்தைகளுக்கு சாதகமாக இருக்கும். இவௌ வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து புதிய முதலீடுகள் வருவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர்.


latest tamil news


மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கு கொள்முதல் இதுவரை தேசியப் பங்குச்சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடான நிஃப்டியை 2.4 சதவீதம் உயர்த்தியுள்ளது. பங்குகள் தவிர, மே மாதத்தில் கடன் சந்தையில் FPIகள் இதுவரை ரூ.1,432 கோடி முதலீடு செய்துள்ளனர்.

ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு நிபுணர் விஜயகுமார் கூறுகையில், “ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் பிரேசில் போன்ற சிறந்த செயல்திறன் கொண்ட சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. மற்ற வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள் போராடி வருகின்றன. துறைகளைப் பொறுத்தவரை, ஆட்டோமொபைல், கேபிடல் குட்ஸ், சுகாதாரத் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் எப்.பி.ஐ.,க்கள் முதலீடு செய்பவர்களாக இருக்கின்றனர். மேலும், வங்கித்துறையில் வெளிநாட்டவர்களின் முதலீடு பெருமளவு காணப்பட்டது.” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

28-மே-202316:34:24 IST Report Abuse
அப்புசாமி அமெரிக்காவில் விலைவாசி குறைஞ்சுதுன்னா இங்கேதுந்து பணத்தை எடுத்து அங்கே முதலுடு செய்வார்கள். இதெல்லாம் வெறும் ரொட்டேஷன் கோவாலு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X