வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: மணிப்பூரில், மக்களை தாக்கும் பயங்கரவாதிகள் 30 பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் பைரோன் சிங் கூறியுள்ளார்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்டி சமூகத்தினருக்கும், நாகா, கூகி உள்ளிட்ட பழங்குடி சமுகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்ட வந்த நிலையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
இரு தரப்பினர் மோதி கொண்டுள்ளதால், பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்கு நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்ய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஆய்வு செய்ய நேரில் சென்றுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் பைரோன் சிங் கூறுகையில், அப்பாவி மக்களுக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட பதிலடி மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளில் பல இடங்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.