சென்னை : புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டு, செங்கோல் நிறுவப்பட்டதை கொண்டாடும் விதமாக, சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில், இன்று விழா நடந்தது.
இதில், கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:
புதிய நாடாளுமன்றத்துக்கு, செங்கோல் வந்துள்ளது, தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டியது.செங்கோல் என்பது ஆட்சிய மாற்றத்தின் அடையாளமாக, நாட்டின் பழமையான முறையாக இருந்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், இயற்கை விவசாயி லட்சுமி அம்மாள், 94 என்பவரை கவர்னர் ரவி கவுரவித்தார்.