கோல்கட்டா : வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக, 'வந்தே பாரத்' ரயில் சேவையை, பிரதமர் மோடி நாளை (மே.,29)ம் தேதி, துவக்கி வைக்கிறார்.
![]()
|
மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரி மற்றும் அசாம் மாநிலம், கவுஹாத்தி இடையே, இயக்கப்பட உள்ள இந்த ரயில், வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும், முதல் ரயிலாக இருக்கும்.
அதேநேரம், மேற்கு வங்கத்தில் மூன்றாவது ரயிலாகவும், தேசிய அளவில், 18வது ரயிலாகவும், இது இருக்கும். இந்த ரயில், நியூ ஜல்பைகுரி முதல் கவுஹாத்தி வரையிலான, 410 கி.மீ., துாரத்தை, ஆறு மணிநேரத்தில் கடக்க உள்ளது.
![]()
|
இந்த ரயில், வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும், நியூ அலிபுர்துவார், கோக்ரஜார், நியூ போங்கைகான், காமக்யா, நியூ -ஜல்பைகுரி, கவுஹாத்தி என, ஆறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement