ஆமதாபாத் : ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இன்று, பிரிமியர் கிரிக்கெட்போட்டியின் பைனலில், சென்னை, குஜராத் அணிகள் மோதுவதாக இருந்தது. மழையால் ஆட்டம் டாஸ் போடாமலே நாளை(மே.29) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போட்டி துவங்க இருந்த நிலையில், மாலை முதல் மழை பெய்து வருவதால், 'டாஸ்' போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில்
இதையடுத்து, இரவு 9.30 மணிவரை போட்டிக்கான, 'கட்-ஆப்' நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரவு 9.35 மேல் ஆட்டம் துவங்கினால் ஓவர்கள் குறைக்கப்படும் என்ற நிலையில் இரவு 11 ஆகியும் ஆட்டம் துவங்க ஏதுவாக இல்லாததால் போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.