வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வடகுமரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வி, 35. இவர், இன்று, ஆடு மேய்க்கும்போது, சூறாவளி காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது, காஸ் குடோன் அருகில் உள்ள கொட்டகை சுவற்றின் அருகில் நின்றுள்ளார்.
சுவர் முழுவதும் இடிந்து விழுந்ததில் செல்வி உயிரிழந்தார். ஒரு ஆடும் உயிரிழந்தது. அதே பகுதியில் மரம் முறிந்து விழுந்து, ஐந்து மின் கம்பங்கள் முறிந்தது; நான்கு வீடுகள் சேதமானது. தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.