கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் மேல்பாச்சேரி, தொரடிப்பட்டு ஊராட்சிகளில் நடந்த மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாமில், 483 மனுக்கள் பெறப்பட்டது.
முகாமில், உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். மேல்பாச்சேரி கிராமத்தில் 312 மனுக்கள், தொரடிப்பட்டு கிராமத்தில் 171 மனுக்கள் என மொத்தம் 483 மனுக்கள் பெறப்பட்டது.
அப்போது எம்.எல்.ஏ., பேசுகையில், கல்வராயன்மலை பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிலப்பட்டா மற்றும் வீட்டுமனை பட்டாக்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியினர் நலத்துறை சார்பில் மலைவாழ் மக்கள் வீட்டு கட்டும் திட்டத்தில் ரூ. 5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேல்பாச்சேரி ஊராட்சியில் புதிய கிணறு, குளம்மேம்பாடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட 34 பணிகள் ரூ.3.14 கோடி மதிப்பிலும், தொரடிப்பட்டு ஊராட்சியில் 40 பணிகள் ரூ.3.40 கோடி மதிப்பிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது என, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கதிர்சங்கர், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி, மின்வாரிய உதவி இயக்குனர் அருள்சாமி, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வாமணன், தாசில்தார் குமரன், பி.டி.ஓ., அண்ணாதுரை, ஒன்றிய சேர்மன் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் அலமேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.