கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கூடுதல் பஸ் சேவையை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது.
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக, கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 13 பஸ்கள் இயங்கப்பட்டு வருகிறது. இது, போதுமானதாக இல்லை, கூடுதலாக இயக்க வேண்டும் என, பொதுமக்கள், மருத்துவ பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், கள்ளக்குறிச்சியில் இருந்து 17 புதிய பஸ்கள் மற்றும் சங்கராபுரத்தில் இருந்து மருத்துவக் கல்லுாரி வழியாக கள்ளக்குறிச்சிக்கு 9 பஸ்கள் சேவை துவக்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன்மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரிக்கு தினமும் 39 அரசு பஸ் சர்வீஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் (பொ) செந்தில், துணை மேலாளர் (வணிகம்) துரைசாமி, மாவட்ட சேர்மன் புவனேஷ்வரி பெருமாள், கிளை மேலாளர்கள் முருகன், சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.