கள்ளக்குறிச்சி : ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் கே.ஜி., முதல் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இதுகுறித்து பளம்ளி நிறுவனர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தில் 'ஸ்மார்ட் போர்டு' மூலம் பாடம் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவியரின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் இசை, நடன வகுப்புகள், செஸ், கேரம், டேபிள் டென்னிஸ், வில், சிலம்பம், ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகள் அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.
மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த ரோபோடிக்ஸ் வகுப்பு, வார்த்தையை பிழையின்றி சரியாக உச்சரிக்க மொழி ஆய்வகம், அறிவுத்திறனை மேம்படுத்த நுாலகம் உள்ளது. கடந்த 2022-2023ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே, பள்ளியில் அனைத்து மாணவர்களும் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். நடப்பு கல்வியாண்டில் பிளஸ்1 வகுப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 வகுப்பிற்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.