கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையுடன் இணைந்து எப்.எஸ்.எஸ்., நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. தாயார் நகர் எப்.எஸ்.எஸ்., கட்டடத்தில் நடந்த முகாமை நகராட்சி சேர்மன் சுப்ராயலு துவக்கி வைத்தார்.
அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் திருமலை முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ரத்த வங்கி டாக்டர் விஜயகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், பாலா, செவிலியர் சத்யா, ஆய்வக நுட்புனர் செல்வம் மற்றும் ஜெயந்தி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் ரத்த தான பணிகளை மேற்கொண்டனர். முகாமில் 25 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. அறங்காவலர் குழுவினர் அரவிந்தன், வைத்திலிங்கம், பெருமாள், ரங்கராஜன் உள்ளிட்டோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.