ஆதீனங்களின் ஜாதியை விமர்சிப்பதா? அண்ணாமலை கடும் கண்டனம்
ஆதீனங்களின் ஜாதியை விமர்சிப்பதா? அண்ணாமலை கடும் கண்டனம்

ஆதீனங்களின் ஜாதியை விமர்சிப்பதா? அண்ணாமலை கடும் கண்டனம்

Updated : மே 28, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை:''எதிர்க்கட்சிகள் சைவ ஆதீனங்களின் ஜாதியை விவாதத்திற்கு உள்ளாக்குவது வருத்தம் அளிக்கிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரின் மற்றொரு அறிக்கை: பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் கோவிலான புதிய பார்லிமென்டை நம் தேசத்திற்கு அர்ப்பணித்து உள்ளார். அதிகார பரிமாற்றத்தை குறிக்கும் செங்கோல், 1947ல் திருவாசகம் பாடல்கள் பாடப்பட்ட

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:''எதிர்க்கட்சிகள் சைவ ஆதீனங்களின் ஜாதியை விவாதத்திற்கு உள்ளாக்குவது வருத்தம் அளிக்கிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



latest tamil news


அவரின் மற்றொரு அறிக்கை:



பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் கோவிலான புதிய பார்லிமென்டை நம் தேசத்திற்கு அர்ப்பணித்து உள்ளார். அதிகார பரிமாற்றத்தை குறிக்கும் செங்கோல், 1947ல் திருவாசகம் பாடல்கள் பாடப்பட்ட விழாவில், நேருவிடம் திருவாடுதுறை ஆதீனத்தால் ஒப்படைக்கப்பட்டது.

'வாக்கிங் ஸ்டிக்காக' துாக்கி எறியப்பட்ட அந்த செங்கோல், தமிழகத்தின் சைவ ஆதீனங்களின் ஆசிர்வாதத்தை பெற்ற பின், பிரதமர் மோடியால், சரியான இடத்திற்கு மீட்டெடுக்கப்பட்டது.


ஆங்கிலேயே கிழக்கிந்திய நிறுவனம், நம் நாட்டின் நாகரிக நெறிமுறைகளை அழிப்பதில் முனைந்திருந்த போது, சைவ ஆதீனங்கள் தமிழ் கையெழுத்து பிரதிகளை, குறிப்பாக சங்க காலத்தில் இருந்து சேமித்து பாதுகாப்பதில் பெருமளவில் பங்களித்தன.ஆதீனங்கள் இன்று வரை தமிழகம் முழுதும் உள்ள கோவில்களை நிர்வகிப்பதிலும், குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்குவதிலும், குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர்.


சைவ ஆதீனங்கள் ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் அல்ல. புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் பங்கேற்ற, சைவ ஆதீனங்கள் சைவ வேளாளர், கற்காத்த வேளாளர், தொண்டை மண்டல சைவ வேளாளர், கொங்கு வேளாளர், பண்டாரம், நகரத்தார், ஆதி சைவர், அகமுடையார் ரத்தினகரர் என, அனைத்து சமூகத்தினரும் உள்ளனர். இந்த சமூகங்களில் சில, ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவை.
எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தகுதியான எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பதும், தமிழகத்தின் அமைப்பை புரிந்து கொள்ளாமல், சைவ ஆதீனங்களின் ஜாதியை விவாதத்திற்கு உள்ளாக்குவதும் வருத்தம் அளிக்கிறது. வடக்கே ராஜ தாண்டம் அல்லது தெற்கில் செங்கோல்; இரண்டுமே நீதியை குறிக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


latest tamil news


'நோபல் பிரிக்ஸ்' நிறுவனத்துடன் உதயநிதிக்கு தொடர்பு என்ன?


'நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:'தி.மு.க., பைல்ஸ்' வெளியிட்ட போது, நோபல் ஸ்டீல் நிறுவனத்தின், 1,000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பி இருந்தோம். முறைகேடான முதலீடு என்ற குற்றச்சாட்டிற்கு பதிலும் வரவில்லை. முறைகேடான பண பரிவர்த்தனை மேற்கொண்ட, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த, அதே முகவரியில், அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன; இதற்காவது பதில் வருமா?இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
29-மே-202316:50:31 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN கூடிய விரைவில் இந்த ஆதாரங்களின் மேல் பாலியல் வழக்கு திராவிட மாடல் அரசு தொடுத்தாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. சுகாதார துறை மந்திரி இந்து அறநிலையத்துறை மந்திரி மற்றும் டாஸ்மாக் மந்திரி கூட்டணி இது குறித்து திட்டமிடலாம். ஆதீனங்கள் இது குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத மற்றும் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்கும் பெண்மணிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆதீனத்திற்கு வரும் அனைத்து நபர்களையும் கடும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்க வேண்டும். செல்போன்கள் முற்றிலும் தடை செய்ய வேண்டும். பேரூர் ஆதீனம் தமிழ் கல்லூரி மாணவிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழ் கல்லூரி வளாகத்தில் செல்போன் ஜாமர்கள் பொருத்த வேண்டும். செல்போன்கள் முற்றிலும் தடை செய்ய வேண்டும் அது ஆசிரியர்களாக இருந்தாலும். கண்காணிப்பு கேமராக்கள் அதிகப்படுத்தி கூர்ந்து கவனிக்க வேண்டும்.
Rate this:
Cancel
KV Pillai - Chennai,இந்தியா
29-மே-202311:42:17 IST Report Abuse
KV Pillai கர்நாடகா.. கர்நாடகா... அடிக்கடி இந்த பெயரை அய்யா காதில் விழும்படி காங் கட்சியினர் சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
29-மே-202311:29:46 IST Report Abuse
தஞ்சை மன்னர் நீயாக புதுசா கிளப்பி விட்டதால் உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X