ரகசியமாக எம்.டெக்., படித்து சாதனை: தடைகளை தகர்த்த ஆப்கன் மாணவி
ரகசியமாக எம்.டெக்., படித்து சாதனை: தடைகளை தகர்த்த ஆப்கன் மாணவி

ரகசியமாக எம்.டெக்., படித்து சாதனை: தடைகளை தகர்த்த ஆப்கன் மாணவி

Updated : மே 29, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி,-ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டு மாணவி சென்னை ஐ.ஐ.டி.,யில் ரகசியமாக எம்.டெக்., படிப்பை முடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. அனுமதி மறுப்புதெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 2021ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அவர்கள் கல்வி கற்க அனுமதி
M.Tech in secret and broke the barriers of achievement Afghan girl secretly M.Tech in study and achievement  ரகசியமாக எம்.டெக்., படித்து சாதனை: தடைகளை தகர்த்த ஆப்கன் மாணவிபுதுடில்லி,-ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டு மாணவி சென்னை ஐ.ஐ.டி.,யில் ரகசியமாக எம்.டெக்., படிப்பை முடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது.


அனுமதி மறுப்புதெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 2021ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அவர்கள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்கனின் சர் இ போல் பகுதியைச் சேர்ந்த மாணவி பெகிஸ்தா கைருதீன், சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் எம்.டெக்., படிப்பை ரகசியமாக முடித்துஉள்ளார்.

கடந்த 2021ல், எம்.டெக்., கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த அவர், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் படிப்பில் சேர முடியவில்லை.

இருப்பினும், பேராசிரியர் ஒருவர் உதவியுடன், 'ஆன்லைன்' வாயிலாக படித்த பெகிஸ்தா, பல்வேறு தடைகளைத் தாண்டி எம்.டெக்., படிப்பை வெற்றிகரமாக சமீபத்தில் முடித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

வீட்டில் இருந்தபடியே படித்ததால், முதல் இரண்டு செமஸ்டர்கள் கடினமாக இருந்தன.

ஆய்வக வசதியை பெற முடியாததால், பேராசிரியரின் அறிவுறுத்தலின்படி, வீட்டிலேயே மாதிரி ஆய்வகத்தை உருவாக்கினேன். என் சகோதரி சமையலுக்கு பயன்படுத்தும் 'மைக்ரோவேவ் ஓவன்' மற்றும் நகைக்கடையில் பயன்படுத்தப்படும் குடுவைகள் ஆகியவற்றை வைத்து வீட்டிலேயே நிறுவிய ஆய்வகத்தில் பயிற்சி பெற்றேன்.


பட்டமளிப்பு விழாவெற்றிகரமாக படிப்பை முடித்துள்ள நிலையில், சென்னையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்று பட்டம் பெற விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை. அடுத்து பிஎச்.டி., படிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (4)

S.kausalya - Chennai,இந்தியா
29-மே-202320:07:33 IST Report Abuse
S.kausalya படித்தது சரி..அதன் பின் என்ன செய்ய போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. Aafganukku போய் ஒன்றும் பயனில்லை. முடக்கி விடுவார்கள். இந்தியாவில் இருந்தால் மத வெறி ஏற்றி. உருப்பட விட மாட்டார்கள். வெளி நாடு போனால் படித்த படிப்பு வீணாகாது. பெயரை நினைவு வைத்த கொள்ள முடியும். எப்போதாவது சாதனை பட்டியலில் வருவாரா என பார்க்கலாம்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-மே-202318:05:00 IST Report Abuse
raja இந்த பக்கம் இந்த பெண்ணுக்கு வாழ்த்து சொல்ல இறநூறு ஊபீஸ் மார்க்க மூர்கன் ஒருத்தனையும் காணுமே...
Rate this:
Cancel
MPRMTNJ - CHENNAI,இந்தியா
29-மே-202312:21:52 IST Report Abuse
MPRMTNJ முட்டாள் ஆப்கானிஸ்தான் முல்லாக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X