வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக முதல்வர் ஸ்டாலின்:
தமிழகத்தில் வாழும், 7 கோடி மக்களின் முதல்வராக ஜப்பான் வந்துள்ளேன். இந்தியாவுக்கே பெருமையும், வளமும் சேர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தின் தொன்மையையும், பழமையையும், கீழடி மற்றும் பொருநை உலகிற்கு அடையாளம் காட்டுகின்றன.
![]()
|
டவுட் தனபாலு:
எங்கயோ இருக்கிற ஜப்பான்ல போய், தமிழகத்தின் அருமை, பெருமையை பேசுறீங்களே... இங்க, நம்ம நாட்டுல, தமிழகத்தின் செங்கோலை பார்லிமென்ட்ல வச்சு, பெருமை தேடி தந்த மோடி அரசை ஒரு வார்த்தை பாராட்ட மறுப்பது ஏன் என்ற, 'டவுட்' எழுகிறதே!
பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன்:
ரவுடியிசமும், தி.மு.க.,வும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள். வருமான வரித்துறை அதிகாரிகள் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதை, போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. போலீசுக்கு தெரியாமல் எந்த சம்பவமும் நடப்பதில்லை. இது, ஆட்சி முடிவு கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதை காட்டுகிறது.
டவுட் தனபாலு
: அது சரி... ஜெ., ஆட்சியில, தமிழக கவர்னரா இருந்த சென்னா ரெட்டி கார் மீது தாக்குதல் நடத்தியது, 'மாஜி' தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டலை சூறையாடியது, ப.சிதம்பரத்தை ஏர்போர்ட்ல, 'ரவுண்டு' கட்டிய, அ.தி.மு.க.,வினர் முன்னாடி, தி.மு.க.,வினர் நிற்கவே முடியாதுங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
'தி.மு.க., பைல்ஸ் 1' போல, தி.மு.க., அரசின் ஊழல்கள் குறித்து, 'தி.மு.க., பைல்ஸ் 2' ஜூலை முதல் வாரத்தில் கோவையில் வெளியிடப்படும். அப்போது, இவர்களின் ஊழல் பட்டியல், மக்களுக்கு தெளிவாக தெரிந்து விடும். 1 சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை என சொல்லிக் கொண்டு இருப்பவர்களின் உண்மை வெளிவரும்.
![]()
|
டவுட் தனபாலு
: நீங்களும் சினிமா படங்கள் மாதிரி, பாகம் ௧, ௨ன்னு ரிலீஸ் பண்ணிட்டே தான் இருக்கீங்க... ஆனாலும், அவங்க நடவடிக்கையில எந்த மாற்றமும் வந்த மாதிரி தெரியலையே... அவங்க புத்திசாலிகளா அல்லது நீங்க வலுவான ஆதாரங்களை சேகரிக்க தவறிட்டீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!