வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
சிங்கப்பூர் பயணத்தை முடித்து, ஜப்பான் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று ஒசாகாவில் இருந்து டோக்கியோவிற்கு, புல்லட் ரயிலில் பயணித்தார். இதுதொடர்பாக, தன் சமூக வலைதள பதிவில், அவர் கூறியிருப்பதாவது:
ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவிற்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ, 500 கி.மீ., துாரத்தை, 2:30 மணி நேரத்தில் அடைந்தோம்.
உருவமைப்பில் மட்டுமின்றி, வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நம் நாட்டிலும் பயன்பாட்டிற்கு வரவேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்.இவவாறு முதல்வர் கூறியுள்ளார். முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் ராஜா, செயலர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றனர்.
சிங்கப்பூர் பயணத்தை முடித்து, ஜப்பான் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று ஒசாகாவில் இருந்து டோக்கியோவிற்கு, புல்லட் ரயிலில் பயணித்தார். இதுதொடர்பாக, தன் சமூக வலைதள பதிவில், அவர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
-->