அடுத்த 5 ஆண்டுகளில் யு.பி.ஐ., வாயிலாக மேற்கொள்ளப்படும் சில்லறை பரிவர்த்தனைகள் 90 சதவீதமாக அதிகரித்து, நாளொன்றுக்கு பரிவர்த்தனை எண்ணிக்கை 100 கோடியை எட்டுமென பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனம் கணித்துள்ளது.
எளிதாக பணம் பெறுவதற்கும், செலுத்துவதற்கும் மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. ..
உள்நாட்டில் மட்டுமன்று சிங்கப்பூர், ஜப்பான் இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை எல்லை விரிவடைந்து வருகிறது. நாடு முழுவதும் சில்லறை விற்பனை பிரிவில், 2022-23ம்
நிதியாண்டில் 75 சதவீத பரிவர்த்தனைகள் யு.பி.ஐ வாயிலாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் (Pwc) நிறுவனம் 'தி இந்தியன் பேமண்ட்ஸ் கையேடு - 2022-27' ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய டிஜிட்டல் பேமண்ட் சந்தையானது, சி.ஏ.ஜி.ஆரில் 50 சதவீதம் நிலையான வளர்ச்சியை கண்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் 103 பில்லியனில் இருந்து 2026-27ம் நிதியாண்டில் 411 பில்லியன் பரிவர்த்தனைகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-2027ம் நிதியாண்டில் யு.பி.ஐ நாளொன்றுக்கு 1 பில்லியன் பரிவர்த்தனைகளை பதிவு செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23ல் 83.71 பில்லியன் பரிவர்த்தனைகளிலிருந்து 2026-27ல் 379 பில்லியன் பரிவர்த்தனைகளாக இருக்கும்.
![]()
|
கிரெடிட் கார்டு பிரிவு ஆரோக்கியமான விகிதத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஏனெனில் யு.பி.ஐ.,க்கு அடுத்ததாக, சில்லறை டிஜிட்டல் பேமண்ட்டுகளுக்கு கார்டு வாயிலாக பணம் செலுத்தும் கருவிகள் வருகிறது. 2024-2025 நிதியாண்டுக்குள் கிரெடிட் கார்டுகளின் பரிவர்த்தனைகளின் அளவு டெபிட் கார்டுகளை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் கிரெடிட் கார்டு வழங்குவது ஆண்டு வளர்ச்சி விகிதம் 21 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், டெபிட் கார்டு வழங்குவது 3 சதவீதம் தேக்க நிலையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெபிட் கார்டு பயன்பாடு சரிவடைய, டெபிட் கார்டுகளை முக்கியமாக பணத்தை திரும்ப எடுக்க பயன்படுத்துவதே ஆகும். தற்போது யு.பி.ஐ., வாயிலாக பணம் எடுப்பது எளிதான வழியாக மாற்றப்பட்டுள்ளது.
![]()
|
கிரெடிட் கார்டு வணிகத்தின் மூலம் வருவாயானது 2022-2023ம் ஆண்டில் ஒட்டுமொத்த கார்டுகளின் வருவாயில் கிட்டத்தட்ட 76 சதவீதத்தை கொண்டுள்ளது. இது வங்கிகள்,
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஃபின்டெக் ஆகியவற்றிற்கு லாபகரமான வணிகப் பிரிவாக அமைகிறது. கிரெடிட் கார்டு வருவாய் 2021-2022ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2022-2023ல் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் 33 சதவீதமாக, ஆண்டு வளர்ச்சி வீதம் வளர்ச்சியடையும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.