ப.வேலுார்: ப.வேலுாரில் டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், அனுமதியின்றி இயங்கி வந்த இரண்டு, 'பார்'கள் மூடப்பட்டன.
ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில், 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை ஒட்டி, 'பார்' செயல்பட்டு வந்தது. இந்த நான்கு கடைகளுமே அரசு அனுமதி பெற்ற, 'பார்' என பிளக்ஸ் போர்டு வைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தன. இந்த கடைகளில் அதிகாலை முதலே மதுவிற்பனை நடந்தாலும், போலீசார் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம், டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் இரண்டு கடைகள்
மட்டுமே, அரசு அனுமதி பெற்று இயங்கியது தெரிய வந்தது. மற்ற இரண்டு கடைகள் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து இப்பகுதி போலீசாருக்கும் தெரியவில்லை.
அனுமதியின்றி இயங்கிய, 2 பார்களை உடனடியாக மூட டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து, இரண்டு பார்களும் மூடப்பட்டன. மேலும், உரிய உரிமமின்றி, 'பார்' நடத்தினால் பாரில் பணிபுரிபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது போலீசார் மூலம் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.