நாமக்கல்: நாமக்கல் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) முருகன் தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் நாசர் வரவேற்றார். தோட்டக்கலை துணை இயக்குனர் கணேசன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் தங்களது துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள் குறித்து விளக்கினர்.
அதேபோல், வேளாண் உதவி இயக்குனர் தனம், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயபிரதா, மீன்வள சார் ஆய்வாளர் கோகிலவாணி, விதை சான்று மற்றும் அங்ககத்துறை வேளாண் உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி ஆகியோர், துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தனர்.
கருத்தரங்கில், சென்னை வேளாண் வணிக ஆலோசகர் ராஜசேகரன், சேலம் மாவட்டம், வீரபாண்டி களஞ்சிய ஜூவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் சிவராணி, கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் மணிகண்டன் ஆகியோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான அடிப்படை தேவைகள், கடன் உதவி திட்டங்கள் மற்றும் நிறுவனத்தை மேம்படுத்தி, லாபகரமாக செயல்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பம், ஆலோசனை
வழங்கினர்.
இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், ஏராளமான முன்னோடி விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்
சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள்
செய்திருந்தனர்.