ஸ்ரீவில்லிபுத்துாரில் கதம்ப வண்டு கடித்ததில் பெண் வி.ஏ.ஓ., உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், முல்லை நகர் புது தெருவைச் சேர்ந்தவர் இந்திரா காந்தி, 54.; ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா, மல்லி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு வீட்டில் மாடிக்கு சென்றபோது, கதம்ப வண்டு கடித்துள்ளது. உடன், ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.