வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தின் ஒரே காங்., எம்.எல்.ஏ., பைரோன் பிஸ்வா , ஆளும் திரிணாமுல் காங்., கட்சியில் இணைந்தார்,
இம்மாநிலத்திற்கு கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்., 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சி அமைத்தார். எனினும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா, தோல்வியுற்றார். இத்தேர்தலில் காங். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
![]()
|
இந்த நிலையில், சாஹர்திகி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்.,வேட்பாளர் பைரோன் பிஸ்வா வெற்றிபெற்றார். இதன் மூலம் மேற்குவங்கத்தில் ஒரே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பைரோன் பிஸ்வா செயல்பட்டு வந்த நிலையில், இன்று அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்.,மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதன் மூலம் காங்.,கட்சி உறுப்பினர்கள் இல்லாத மாநிலமானது மேற்குவங்கம்.