சென்னை : ''சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தின்படி, அடிப்படை தகுதி பெற்றவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய தகுதி இல்லை,'' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபாதி மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளான ஆயுஷ் மருத்துவ படிப்புகளை படித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் தொடர்பான சான்றிதழ் முடித்த மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஒலியியல் பரிசோதனைகள் செய்ய அனுமதிக்க, மத்திய- மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி, கருவில் இருக்கும் குழந்தை பெண் என்றால், குழந்தையை கருவிலேயே அழிக்க, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை முறை, துணை செல்கிறது.
இதை தடுக்க, 1994ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, சிசு பாலின தேர்வு தடை சட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்ள, பல்வேறு சிறப்பு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனைகளை நடத்த தகுதி உள்ளது.
தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்களுக்கான சட்டம், 2018 பிரிவு 32ன்படி, இந்த சிறப்பு தகுதிகளை பெறாத மருத்துவர்கள், இச்சோதனைகளை நடத்த தகுதியில்லை.
![]()
|
மனுதாரர் சங்க உறுப்பினர்கள், எக்ஸ்-ரே, இ.சி.ஜி., போன்ற அடிப்படை பயிற்சிகளை மட்டுமே பெற்றுள்ளனர்.எனவே, அவர்கள் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement