கூகுள் முன்னாள் சிஇஓ எரிக் ஸ்கிமிட் கணினி மென்பொருள் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். கணினி மென்பொருள் நிறுவனமான கூகுள், தற்போது செயற்கை நுண்ணறிவுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுமூலம் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களைக் கொல்ல பயன்படுத்தப்படலாம் என எரிக் ஸ்கிமிட் எச்சரித்துள்ளார். எலான் மஸ்க், ஆப்பிள் துணை நிறுவனர் ஸ்டீவ் ஓக்னியாக், விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் உள்ளிட்ட பலர் ஏற்கனவே இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள், இயந்திரங்களை எதிர்காலத்தில் ராணுவத்தில் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், செயற்கை நுண்ணறிவு குறித்த அளவுக்கதிகமான ஆராய்ச்சி ஆபத்தானது என கூறப்படுகிறது. எனவே செயற்கை நுண்ணறிவை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம் என பலர் கூறியுள்ளதை எரிக்-கும் உறுதிபடுத்தியுள்ளார்.
![]()
|
எதிர்காலத்தில் பயோ வெப்பன் தயாரிக்க கணினி ஹேக்கர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கொரோனா போன்று மனித இனத்துக்கு ஆபத்தான வைரஸை பரப்ப செயற்கை நுண்ணறிவு பயன்படலாம். எனவே இதுகுறித்த ஆய்வுக்கு கட்டுப்பாடு தேவை என உலக விஞ்ஞானிகள் பலரும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கணினிக்கு சிந்திக்கும் திறனை ஓர் அளவுக்கு மேல் அளிப்பது ஆபத்து, எனவே கணினி தானாகக் கற்றுக்கொள்ளும் மிஷின் லேர்னிங் முறைக்கு ஓர் கட்டுப்பாட்டை வைப்பது அவசியம் எனக் கூறப்படுகிறது.