கோவை:கோவை, அவினாசி ரோடு, மேம்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வி.எச்.ரோடு போலீசார், கடந்த 2019, ஜன., 13 ல், சோதனை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த, சிரியன் சர்ச் ரோட்டைசேர்ந்த சதீஷ்குமார்,31, என்பவரை மடக்கி பிடித்து விசாரித்த போது, பையில், 1.250 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், சதீஷ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
அவர் மீது, கோவை இ.சி., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு, ஏழாண்டு சிறை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.