சூரத் : 'குஜராத் மக்கள் ஒன்று திரண்டு வந்தால், இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தானையும் ஹிந்து நாடாக மாற்றுவோம்,' என, உத்தரகாண்ட்டைச் சேர்ந்த, சாமியார் பேசியது, வைரலாகி வருகிறது.

உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர் தாம் என்ற கோவிலின் தலைவராக, தீரேந்திர சாஸ்திரி என்பவர் உள்ளார்.
சர்ச்சைக்குரிய விதமாக பேசுவதை, வாடிக்கையாக கொண்டுள்ள இவர், இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என, பலமுறை கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின், சூரத், ஆமதாபாத், ராஜ்கோட் மற்றும் வதோதரா ஆகிய இடங்களில், பத்து நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை, இவர் நடத்தி வருகிறார்.

சூரத் நகரில் நடந்த, கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாகேஷ்வர் தாம்,' குஜராத் மண்ணுக்கு நான், தலை வணங்குகிறேன். இங்குள்ள, மக்களை வெல்வது கடினம்.இன்று போல், குஜராத் மக்கள் எப்போது, ஒன்று திரண்டு வருகிறார்களோ அப்போது, இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தானையும், ஹிந்து நாடாக மாற்றுவோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு, ராமரும், இந்தியாவுமே தேவை. அதனை கையாள, பாகிஸ்தானால் முடியவில்லை,' எனக் கூறியுள்ளார்.
இது குறித்த, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.