மே 30, 1929
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், சாத்தப்ப பிள்ளை - செங்கமலம் தம்பதிக்கு மகனாக, 1848ல் பிறந்தவர் அப்பாவு என்ற, குமரகுருதாசன். சிறுவயதில், கந்தசஷ்டி கவசத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருந்தார். தன், 12வது வயதில் கவிதை எழுதும் திறன் பெற்றிருந்தார். 1894ல், பிரப்பன்வலசை என்ற ஊரில் நிஷ்டையில் இருந்த இவருக்கு, 35வது நாளில் முருகன் அருள் வழங்கியதாக கூறப்படுகிறது.
கனவில் முருகன் கூறியதால், சென்னை சென்றார். அங்கு பக்தர்களுக்கு முருகனின் பெயரால் அருள் வழங்கிய இவர், 'மகா தேஜோ மண்டல சபை'யை துவக்கினார். பல முருக பாடல்களையும் எழுதினார். இவர், 1929ல் இதேநாளில், தன், 80வது வயதில், ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பனில் மறைந்தார். அதனால், இவர் பாம்பன் சுவாமிகள் என, அழைக்கப்பட்டார். இவரின் சமாதியை, சீடர்கள் சென்னை திருவான்மியூரில் அமைத்தனர்.
'நீ இன்பத்தில் இருக்கும் போது, இறைவனை நினைத்தால், துன்பத்தில் இருக்கும் போது, இறைவன் உன்னை நினைப்பான்' என்ற, பாம்பன் சுவாமிகளின் நினைவு தினம் இன்று!