பொன்னேரி: பொன்னேரி அடுத்த மனோபுரம்- ரெட்டிப்பாளையம் கிராமங்களுக்கு இடையே உள்ள பகுதியில், 2019ல் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடந்தன.
இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் கிராம வாசிகளை மறித்து மொபைல் போன், பணம், நகை உள்ளிட்டவைகள் பறித்து, தாக்குதல் சம்பவங்களும் நடந்தன.
மேற்கண்ட பகுதியில், தெருவிளக்கு இல்லாததால், சாலை மறியல் போராட்டங்களை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அப்பகுதியில், 14 இடங்களில் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
இதனால் கிராம வாசிகள் அச்சமின்றி இருந்து வந்தனர்.
இந்நிலையில் அமைக்கப்பட்ட சோலார் மின் விளக்குகள் ஓராண்டாக பழுதடைந்துள்ளன. சோலார் விளக்குகள் பழுது குறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும், சரிசெய்வதில் அலட்சியம் காட்டுவதாக கிராம வாசிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். சோலார் மின் விளக்குளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.