பெங்களூரு-''மத்திய அரசு, கர்நாடகாவுக்கு ஒதுக்கும் திட்டங்களை நிறைவேற்ற, மாநில அரசு பாடுபட வேண்டும். இதில் அரசியல் செய்தால், இழப்பு ஏற்படும்,'' என, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று, பசவராஜ் பொம்மை அளித்த பேட்டி:
அனைவருக்கும் இலவசம், எங்களுக்கும் இலவசம், உங்களுக்கும் இலவசம் என்று தேர்தலின் போது, காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
தற்போது மாறுபட்ட அறிக்கைகளை வெளியிட்டு, காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து விட்டது.
மாநிலத்துக்கான மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற, கர்நாடக அரசு பாடுபட வேண்டும். இதில் அரசியல் செய்தால், கர்நாடகாவுக்கு இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.