தங்கவயல்--மின் இணைப்பு பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால் தங்கவயலில் இன்றும், நாளையும் மின் தடை செய்யப்படுகிறது.
ஆண்டர்சன்பேட்டை பகுதியில், மின் இணைப்பு பழுது பார்த்தல் பணிகள் காலை 10:30 முதல் மாலை 5:30 மணி வரை நடப்பதால், பைசன ஹள்ளி, லக்கின ஹள்ளி, போர்ட குர்கி, பேட்ராயன ஹள்ளி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. ராபர்ட்சன்பேட்டை பகுதியில் நாளை மின் இணைப்பு பழுது பார்க்கும் பணிகள் காலை 10:30 முதல் மதியம் 5:30 மணி வரை நடக்கிறது.
இதனால் சஞ்சய் காந்தி நகர், எம்.ஜி.மார்க்கெட், அம்பேத்கர் சாலை, 4வது பிளாக், பாலகிருஷ்ணா லே - அவுட், பிரிட்சர்ட் ரோடு, பைப் லைன், காந்திநகர் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
இத்தகவலை, 'பெஸ்காம்' செயல் பொறியாளர் தெரிவித்துள்ளார்.