மர்பி டவுன்,-மர்பி டவுனில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 34.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
பெங்களூரு மர்பி டவுனில் வசிப்பவர் ரசினா லுாயிஸ், 40. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். சொந்தமாக வீடு வாங்க நினைத்தார். இதற்காக, வங்கி லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து வந்து வீட்டின் பீரோவில் வைத்தார்.
கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டி விட்டு ரசினாவும், அவரது கணவரும் வேலைக்கும்; இரு பிள்ளைகள் கல்லுாரிக்கும் சென்றிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள், ரசினா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 4.50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளை அடித்து தப்பினர்.
வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த போது, திருட்டு நடந்தது தெரிந்தது. ஹலசூரு போலீஸ் நிலையத்தில், ரசினா புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.