பட்டினப்பாக்கத்தில் நின்ற கப்பலால் பரபரப்பு
பட்டினப்பாக்கத்தில் நின்ற கப்பலால் பரபரப்பு

பட்டினப்பாக்கத்தில் நின்ற கப்பலால் பரபரப்பு

Added : மே 30, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, கடலுக்கு அடியில் 'பைபர் நெட் கேபிள்' பதிப்பதற்காக, பட்டினப்பாக்கம் அருகே நின்றிருந்த கப்பலால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.ஜப்பான் நாட்டு நிறுவனமான, என்.டி.டி., 'குளோபல் டேட்டா சென்டர்' நிறுவனம், இந்தியா, தாய்லாந்து, மியான்மர், மலேஷியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் வகையில், 3,500 கோடி ரூபாய் செலவில் கடலுக்கு அடியில், 8,100

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, கடலுக்கு அடியில் 'பைபர் நெட் கேபிள்' பதிப்பதற்காக, பட்டினப்பாக்கம் அருகே நின்றிருந்த கப்பலால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.



latest tamil news



ஜப்பான் நாட்டு நிறுவனமான, என்.டி.டி., 'குளோபல் டேட்டா சென்டர்' நிறுவனம், இந்தியா, தாய்லாந்து, மியான்மர், மலேஷியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் வகையில், 3,500 கோடி ரூபாய் செலவில் கடலுக்கு அடியில், 8,100 கி.மீ., நீளத்திற்கு 'பைபர் நெட் கேபிள்' எனும் கண்ணாடியிழை வடம் பதிக்கும் பணியை சமீபத்தில் துவங்கியது.

இதில், மும்பை, சென்னை நகரங்களில், கேபிள் இணைப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. மும்பையில் இருந்து கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டு வந்த பைபர் நெட் கேபிள்களை, சென்னையில் உள்ள என்.டி.டி., நிறுவன அலுவலகத்துடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்பக் கப்பல், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக நின்றிருந்ததால், அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. விஷயம் தெரிந்த பின், அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

Godyes - Chennai,இந்தியா
30-மே-202320:05:01 IST Report Abuse
Godyes வடத்தை பதிக்க கடல் பூமி இவ்லை அது வெறும் கேபிள் தண்ணீர் அலையில் ஆடிக்கொண்டிருக்கும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-மே-202317:31:58 IST Report Abuse
Kasimani Baskaran முதலீடு வந்துவிட்டது என்று உருட்ட வசதியாக கப்பல் வந்திருக்கிறது...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-மே-202313:20:36 IST Report Abuse
Ramesh Sargam "காக்கை உட்கார, பனம்பழம் விழுந்த" கதை போல் இருக்கிறதே. தமிழக முதல்வர் சிங்கப்பூர் சென்று தமிழகம் திரும்புவதற்குள் இப்படி ஒரு செயலா? திமுகவினரை இனி பிடிக்கவே முடியாதே... உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இது ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சென்றதால் ஏட்பட்ட ஒரு செயல் அல்ல. இந்த கேபிள் பொருத்துவதற்கு பல ஆண்டு முன்னரே இதற்கான வேலைகளை மத்திய அரசும், மற்றும் பல தனியார் நிறுவனங்களும் எடுத்திருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X