அதிசயம்! கவுன்சிலர்கள், அதிகாரிகள் கை 'சுத்தமாம்': லஞ்ச புகாரே இல்லாத மாநகராட்சி!
அதிசயம்! கவுன்சிலர்கள், அதிகாரிகள் கை 'சுத்தமாம்': லஞ்ச புகாரே இல்லாத மாநகராட்சி!

அதிசயம்! கவுன்சிலர்கள், அதிகாரிகள் கை 'சுத்தமாம்': லஞ்ச புகாரே இல்லாத மாநகராட்சி!

Updated : மே 30, 2023 | Added : மே 30, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் முதல் அனைத்து வார்டு அலுவலகங்களிலும், மக்கள் சேவைக்கு லஞ்சம் வாங்கும் நிலையில், மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு காவல் துறையில், ஓராண்டாக ஒரு புகார் கூட பதிவாகாமல் இருப்பது, அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி தலைமை அலுவலகத்திலேயே, லஞ்ச ஒழிப்பு காவல் துறை
Miracle! Councillors, officials hands clean: Corporation without bribery!  அதிசயம்! கவுன்சிலர்கள், அதிகாரிகள் கை 'சுத்தமாம்': லஞ்ச புகாரே இல்லாத மாநகராட்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் முதல் அனைத்து வார்டு அலுவலகங்களிலும், மக்கள் சேவைக்கு லஞ்சம் வாங்கும் நிலையில், மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு காவல் துறையில், ஓராண்டாக ஒரு புகார் கூட பதிவாகாமல் இருப்பது, அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி தலைமை அலுவலகத்திலேயே, லஞ்ச ஒழிப்பு காவல் துறை செயல்பட்டு வருகிறது. இதில், ஒரு டி.எஸ்.பி., தலைமையில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நான்கு போலீசார் பணியில் உள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகத்தில், மக்கள் சேவைக்கு அதிகாரிகள் பணம் பெறுவது மற்றும் கவுன்சிலர்கள் கமிஷன் பெறுவதை தடுப்பதில் துவங்கி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை, அத்துறை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனர் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் பெறுவோர் மற்றும் ஊழல் செய்வோரை கண்டறிந்து, மாநகராட்சி மேயருக்கும், லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்துக்கும், அறிக்கையாக சமர்ப்பிப்பர். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில், மேயர் பிரியா பொறுப்பேற்று ஓராண்டுக்கும் மேல் ஆகின்ற நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் துவங்கி, அனைத்து சேவைகளுக்கும் குறைந்தது 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஒருவர், இறப்பு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக, ஹிந்து மக்கள் கழகத்தினர் குற்றச்சாட்டியிருந்தனர்.
மேலும், கட்டட வரைபட பணிக்கு அனுமதி, சாலை வெட்டு பணிக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும், பாதிக்கப்பட்டோர் முறையிட்டனர்.


latest tamil news



இது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து, மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் ஒரு புகார்கூட பதிவாகவில்லை என்பது அதிசயமாக இருக்கிறது.
அதை மெய்ப்பிக்கும் வகையில், அத்துறை போலீசாரும் எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே இருப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள், இத்துறைக்கு உயிரூட்ட, தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு துறையை பொறுத்தவரை, மேயர், கமிஷனர் தான் வழிநடத்த வேண்டும். ஆனால், ஓராண்டுக்கு மேலாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக, வில்லங்கம் உள்ள பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்றவற்றிற்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர்.
மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம், கவுன்சிலர்கள் முன்பணமாக 10 முதல் 15 லட்சம் ரூபாய்; மாதந்தோறும் வருவாயில் 10 சதவீத கமிஷன் போன்றவற்றை கேட்டு மிரட்டி வருகின்றனர்.

அவ்வாறு வழங்காத ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
பிரச்னைகள் இவ்வாறு உள்ள நிலையில், கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவோ, பெற்றதாகவோ மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு துறையில் இதுவரை, ஒரு புகார்கூட பதிவாகவில்லை.
மேலும், லஞ்ச ஒழிப்பு துறையும், யாருக்கும் தெரியாத வகையில், ஒரு கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் பதுங்கியுள்ளது. இப்படி ஒரு துறை செயல்பாட்டில் உள்ளது என்பதே, பொதுமக்களுக்கு தெரிவதில்லை.

அத்துறையின் கீழ் பணியாற்றும் போலீசாரும், பெரிய அளவில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இல்லை. எனவே, அங்கு பணியாற்றுவோர் அனைவரையும் மாற்ற வேண்டும்.
மேலும், பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், தரைதளத்தில் விளம்பர பலகைகளுடன், அத்துறை செயல்பட மேயரும், கமிஷனரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (21)

Sivan - Puliyampatti ,இந்தியா
05-ஜூன்-202311:23:17 IST Report Abuse
Sivan லஞ்சம் கீழ் மட்டத்தில் இல்லை கொஞ்சம் பயமும் நேர்மையாகவும் இப்ப வந்த இளைய தலைமுறை பணியில் சேர்ந்தவர்களின் எல்லா துறைகளிலும் கான முடிகிறது ஆனால் அமைச்சர்களிடம் இருக்கும் தலைமை செயலகத்தில் உள்ள செயலாளர்கள் கை ஓங்கி இருப்பதை காண பார்க்க முடிகிறது இவர்கள் தனது துறையின் கீழ் இயங்கும் துறை அதிகாரிகளை பொம்மை போல உபயோகித்து நியாயமாக செயல்பட விடுவதில்லை பணம் பணம் அப்பொழுது தான் எந்த கோப்பும் நகரும் என்ற நிலையே உள்ளது, இதில் உயர் கல்வி துறையே முதன்மை இடத்தில் உள்ளது இது நேர்மையாக இருக்கும் இறையன்பு ஐயா மற்றும் முதல்வர் அவர்களின் கவனத்திற்கு செல்கிறதா என்று தெரியவில்லை, இந்த அவலம் model மாறுமா இல்லை தொடருமா, யார் கையில் விதி அல்லது மதி உள்ளது
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-மே-202319:52:01 IST Report Abuse
Ramesh Sargam கை சுத்தமா..? இப்படி எல்லாம் அதிர்ச்சி கொடுக்காதீர்கள். ஒரு சிலருக்கு இதுபோன்ற அதிர்ச்சிகளை தாங்கும் சக்தி இல்லை. ஒரு வேலை லஞ்சம் வாங்கி வாங்கி கை 'அழுகி' போய், ஆபரேஷன் செய்து எடுத்திருப்பார்களோ... அதே அதேதான்...
Rate this:
Cancel
Chandrasekaran - al khobar,சவுதி அரேபியா
30-மே-202319:05:20 IST Report Abuse
Chandrasekaran இது சுத்த பொய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X