சென்னை: வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் பிரதான நாளான இன்று (மே 30) தேர் திருவிழா நடைபெற்றது. அதிகாலை, உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேதராக, முருகப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அரோகரா கோஷத்துடன், ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement