இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம், கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவான குறைந்த வேலையின்மை விகிதம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தியதற்கு பிறகு, கடந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முதல் வேலையின்மை விகிதம் சரிந்து வருகிறது.
நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம், 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் 8.2 சதவீதமாக இருந்தது. தற்போது பொருளாதாரம் மீண்டு, வளர்ச்சிப் பாதையில் செல்வதை அடுத்து, 2022-23ம் நிதியாண்டின் 4வது காலாண்டில் வேலையின்மை விகிதம் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் ஆண்களின் வேலையின்மை விகிதம், 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 6.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில்
6.5 சதவீதமாக இருந்தது. 2022ம் ஆண்டு இதே காலத்தில் 7.8 சதவீதமாக இருந்தது.
இதை போன்று, பெண்கள் வேலையின்மை விகிதம் 4வது காலாண்டில் சரிவை
சந்தித்துள்ளது. 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் 9.2 சதவீதமாக பதிவாகி உள்ளது. முந்தைய காலாண்டில் 9.6 சதவீதமாக இருந்தது. 2022ம் ஆண்டு இதே காலத்தில், 10.1 சதவீதமாக இருந்தது. கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் சரிந்துள்ளது.
அனைத்து வயதினரையும் உள்ளடக்கினால், நாட்டில் அதிகபட்ச வேலையின்மை விகிதம் (15.2 சதவீதம்) ஹிமாச்சல் பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்ததாக சட்டீஸ்கரில் (12.5 சதவீதம்), ஜம்மு காஷ்மீரில் (12.4 சதவீதம்) பதிவாகி உள்ளது.
![]()
|
ஜனவரி-மார்ச் 2023ல் 57.3% ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் 57.2 சதவீதத்தோடு சற்று அதிகரித்துள்ளது..ஆனால் 2022 ஜனவரி - மார்ச்
மாதத்தில் பதிவாகிய 57.4 சதவீதத்தில் இருந்து குறைந்துள்ளது.
பெண் மக்கள்தொகையில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2023ல் 18.0 சதவீதமாக இருந்தது.அதற்கு முந்தைய காலாண்டில் 19.1 சதவீதத்தில் இருந்து சற்று அதிகரித்துள்ளது. 2022 ஜனவரி-மார்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில், பெண்களின் பங்கேற்பு விகிதம் 17.3 சதவீதமாக