வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவால் தான் வெற்றி கிடைத்தது என்றும், அவர் பா.ஜ.,வின் தொண்டர் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இதில் கடைசி இரு பந்துகளில் சிக்சர், பவுண்டரி விளாசிய சென்னை வீரர் ஜடேஜா, சென்னை அணியின் கோப்பை கனவை நனவாக்கினார்.
பிரிமியர் லீக் அரங்கில் சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. ஜடேஜா வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றதையடுத்து, சென்னை அணியின் கேப்டன் தோனி அவரை உயரே தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பா.ஜ., தொண்டர். அவர் மனைவி ரிவபா, ஜாம்நகர் வடக்கு தொகுதி பா.ஜ., எம்எல்ஏ; மேலும் அவர் குஜராத்காரர். பா.ஜ., தொண்டரான ஜடேஜா தான் சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.