இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ முன்னதாக ஜிஎஸ்எல்வி எஃப்-12 செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சோதனை செய்தது. வரும் ஜூலை மாதத்தில் நிலவுக்குச் செல்லும் செயற்கைக்கோளான சந்திரயான் ஏவுதலுக்குத் தயாராகிவரும் இஸ்ரோ இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது சீனா, சென்ஷோ 16 விண்வெளி மிஷனில் மும்முரம் காட்டிவருகிறது. இஸ்ரோவின் செயற்கைக்கோள் சோதனைக்கு இணையாக சீனா தனது விண்வெளி ஆராய்ச்சி சோதனையை தீவிரப்படுத்தி வருகிறது.
![]()
|
'புனிதமான விண்வெளி ஓடம்' எனப் பொருள்படும் ஷின்சோ 16 ராக்கெட்டில் மூன்று சீன விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் ஜீகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து மூன்றுபேர் கொண்ட இந்த ராக்கெட் காலை 9.31 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. விண்ணில் உள்ள சீன விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இந்த ராக்கெட் அனுப்பப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கி இது விண்ணுக்கு அனுப்பப்படும் ஐந்தாம் சீன ராக்கெட் சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.