ஆக.,14ல் மவுன்ட்பேட்டன் டில்லியிலேயே இல்லையாம்: சொல்கிறார் ப.சிதம்பரம்
ஆக.,14ல் மவுன்ட்பேட்டன் டில்லியிலேயே இல்லையாம்: சொல்கிறார் ப.சிதம்பரம்

ஆக.,14ல் மவுன்ட்பேட்டன் டில்லியிலேயே இல்லையாம்: சொல்கிறார் ப.சிதம்பரம்

Updated : மே 30, 2023 | Added : மே 30, 2023 | கருத்துகள் (91) | |
Advertisement
புதுக்கோட்டை: முன்னாள் பிரதமர் நேருவுக்கு செங்கோல் அளித்தது தொடர்பான கேள்விக்கு, '1947, ஆகஸ்ட் 14ம் தேதி மவுன்ட் பேட்டன் டில்லியிலேயே இல்லை; அவர் பாகிஸ்தானில் இருந்தார்' எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செங்கோல் விவகாரத்தில் புனைக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. வரலாற்று ஆசிரியர்கள்
Mountbatten was not in Delhi on Aug. 14: says P. Chidambaram  ஆக.,14ல் மவுன்ட்பேட்டன் டில்லியிலேயே இல்லையாம்: சொல்கிறார் ப.சிதம்பரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுக்கோட்டை: முன்னாள் பிரதமர் நேருவுக்கு செங்கோல் அளித்தது தொடர்பான கேள்விக்கு, '1947, ஆகஸ்ட் 14ம் தேதி மவுன்ட் பேட்டன் டில்லியிலேயே இல்லை; அவர் பாகிஸ்தானில் இருந்தார்' எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செங்கோல் விவகாரத்தில் புனைக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. வரலாற்று ஆசிரியர்கள் நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை எழுதியுள்ளனர்.


அதில் திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரயிலில் சென்று, ஆகஸ்ட் 14, 1947ல் மாலையில் நேருவின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். விமானத்தில் செல்லவில்லை. அப்போது, அந்த செங்கோலை நினைவு பரிசாக அளிப்பதாக கூறி நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியுள்ளார். அந்த நேரத்தில் நேருவுக்கு பலநூறு நினைவுப்பொருட்கள் வந்தன. அது அத்தனையும் பத்திரப்படுத்தி அலகாபாத் மியூசியத்தில் வைத்திருந்தனர். அவ்வளவுதான்.latest tamil news

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி மவுன்ட் பேட்டன் டில்லியிலேயே இல்லை; பாகிஸ்தானின் கராச்சியில் இருந்தார். அன்று பாகிஸ்தானின் சுதந்திரநாள். இரவு 7 மணியளவில் தான் மவுண்ட் பேட்டன் பிரபு டில்லி வந்தார். பிறகு 11 மணிக்கு மேல் சுதந்திரம் கொடுப்பதற்கான விழாவை கொண்டாட வருகிறார். 12 மணியளவில் சுதந்திரம் கிடைத்தது;


அப்போது நேரு உரையாற்றினார். மியூசியத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்த செங்கோல், 'நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்கக்கோல்' என்று தான் எழுதியிருந்ததாக அலகாபாத் மியூசியத்தின் தலைமை அதிகாரியே கூறுகிறார்.


மற்றவர்கள் சொல்வதுபோல் 'வாக்கிங் ஸ்டிக்' (கைத்தடி) என்றெல்லாம் எழுதியிருக்கவில்லை. அதெல்லாம் புனைக் கதைகள். வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவது மட்டுமே வரலாறு; மற்றவர்கள் எழுதுவது புனைக் கதைகள். நடக்காததை எல்லாம் நடந்ததாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (91)

Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
03-ஜூன்-202317:02:47 IST Report Abuse
Srivilliputtur S Ramesh . எப்படியும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வோட்டு கேட்டு வருவீங்க....
Rate this:
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
02-ஜூன்-202320:20:12 IST Report Abuse
RADE வரலாற்றை மாற்றிய ஆட்கல் தான நீங்க
Rate this:
Cancel
Muthukrishnan Srinivasan - Edinburgh,யுனைடெட் கிங்டம்
31-மே-202313:48:31 IST Report Abuse
Muthukrishnan Srinivasan Indian independence would date from the last stroke of midnight on 14th August 1947, with a formal ceremony in Delhi. At 8.30am on 15th August 1947, Mountbatten was sworn in as Governor-General of the new Dominion of India, to oversee the transition from British rule.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X