தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா(81). உலகின் முக்கியமான அரசியல் தலைவர் மற்றும் செல்வந்தர்களுள் ஒருவரான ஜேக்கப் ஜூமா, மேடைப் பேச்சினிடையே ஆங்கில உச்சரிப்பில் அடிக்கடி தவறு செய்வார் ஜூமா. அப்போது பலர் கிண்டலாக சிரித்தாலும் அதனைப் பொருட்படுத்தாது தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் பேச முயலுவார்.
இவரது வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாகியது. 'In the begining' என்கிற ஆங்கில வாக்கியத்தைப் பேச முயலும் ஜூமா, 'பிகினிங்' என்பதற்கு பதிலாக தவறி 'பினீங்கிங்' எனக் கூறுவார். பிகினிங் என்கிற வார்த்தை அவரது வாயில் நுழையாமல் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை சரியாக உச்சரிக்க பகீரதப் பிரயர்த்தனம் மேற்கொள்வார் ஜூமா. ஆனாலும் கடைசிவரை 'இன் தி பினீங்கிங்...' என திரும்பத் திரும்பக் கூறி தனக்குத் தானே சிரித்துக்கொள்வார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஜூமாவின் தன்னம்பிக்கைக்குப் பாராட்டுகள் குவிந்தன.
![]()
|
ஆங்கிலத்தில் வார்த்தைகள் சில குழப்பத்தை உண்டாக்கும். இந்த வார்த்தைகள் டங் டிவிஸ்டர் (tongue twister) எனப்படும். பிகினிங் என்கிற ஆங்கில வார்த்தையும் ஒருவித டங் டிவிஸ்டர் வார்த்தைதான். இதேபோல மினிட் (minute), சூப்பரிண்டென்டெண்ட் (superintendent) என்கிற வார்த்தைகளும் நாக்கைக் குழறச் செய்பவை.
இரண்டு வவல்கள் (Vowel... a, e, i, o, u) சேர்ந்து வேறு இரண்டு வவல்கள் போல ஒலிப்பது டிஃப்தாங் (diphthong) எனப்படும். ட்ராட் (Draught), டெய்ல் (tail) போன்ற டிஃப்தாங் வார்த்தைகளை உச்சரிப்பது கடினம். இதுபோன்ற டங் டிவிஸ்டர்கள் ஆங்கிலம் மட்டுமல்ல, இன்னும் பல மொழிகளில் உண்டு.
'வழ வழவெனவுள்ள அமுது கொழ கொழவென ஒழுகி விழ..!' என்று சங்க கால தமிழ் பாட்டில் ஓர் வரி உண்டு. இதில் இரட்டைக் கிளவிகள் டங் டிவிஸ்டர்களாக உள்ளன. சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் ஒரு வரி வரும்.
'யங்ஞ பிரிக்யங்ஞ பிரிக்யக்ஞீ, யக்ஞ பிரிக்யங்ஞ சாகரஹ...'
இதுபோலவே, பிகினிங் என்கிற வார்த்தை டங் டிவிஸ்ட்டராக இருந்ததால் ஜேக்கப் ஜூமா அதனை பினீங்கிங் என உச்சரித்துவிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் இப்போது அந்த வீடியோவை திரும்பத் திரும்பப் பார்த்து சிரித்தவர்களுக்கு பிகினிங் எனக் கூற வராமல் அவரைப் போலவே பினீங்கிங் எனக் கூறி வருகின்றனர்.