பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கொத்தகுப்பம் கிராமத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அருகே, கிராம சேவை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கரும்பு சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
கரும்பு வெட்டும் பணிக்காக, ஆந்திராவில் இருந்து வரும் தொழிலாளர்கள், இந்த சேவை மைய கட்டடத்தில் தங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்தவித பயனும் இன்றி வீணாக இருப்பதை விட, புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் புகலிடமாக இருப்பதற்கு யாரும் ஆட்சேபம் செய்யவில்லை.
அதே நேரத்தில், இந்த கட்டட வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு நிலவுகிறது. சேவை மைய கட்டட வளாகத்தை சுத்தமாக பராமரிக்கவும், கழிவுநீரை வெளியேற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.