ஆர்.கே.பேட்டை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சந்திரவிலாசபுரம், பாலாபுரம் ஊராட்சிகளில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், பழத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆர்.ஜே. கண்டிகை மலை மற்றும் காந்தகிரி மலைகளில் உருவாக்கப்பட்ட பழத்தோட்டங்களில் ஊடுபயிராக காய்கறிகளும், பயிரிடப்பட்டு வருகின்றன.
சந்திரவிலாசபுரம் ஏரிக்கரையில் தற்போது மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏரியில் ஆண்டு முழுதும், நீர் நிரம்பியுள்ள நிலையில், கரையில் நடவு செய்யப்பட உள்ள மரக்கன்றுகளுக்கான தேவையான தண்ணீர், எளிதாக கிடைத்து விடும்.