திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், இலுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில், ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரியின், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் வாயிலாக, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் தத்தெடுத்துள்ள இலுப்பூர் கிராமத்தில், நேற்று நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பேரணி நடத்தினர்.
'திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். கைகளை சோப்பால் சுத்தமாக கழுவ வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்' போன்ற வாசகங்கள் எழுதிய பதாகை ஏந்தி, தெருமுனை பிரசாரம் செய்தனர்.
இதில் ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.