வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால் : மத்திய பிரசேதச மாநிலத்தில், அரசு சார்பில் நடந்த, திருமண விழாவில், மணப்பெண்களுக்கு வழங்கப்பட்ட, ‛கிப்ட் பாக்ஸ்'களில், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தில், அரசு சார்பில் ,296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், புதுமண தம்பதிகளுக்கு வழங்கப்பட்ட, ‛கிப்ட் பாக்ஸ்'ல், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்தன. இதை கண்ட, தம்பதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, அம்மாவட்ட மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
மாநில சுகாதாரத்துறை தரப்பிலேயே, கிப்ட் பாக்ஸ் வழங்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் தரப்பில், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் வழங்கப்படவில்லை.
குடும்பக் கட்டுப்பாடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சுகாதாரத்துறை அதிகாரிகள், இப்படி செய்திருக்கலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.