வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
மும்பை: ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள், எங்கள் அணியில் இணைய தயாராக உள்ளனர் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில், உத்தவ் தாக்கரே ,ஏக்நாத் ஷிண்டே என தனி அணியாக பிரிந்தனர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ,பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். சிவசேனா கட்சி மற்றும் வில் அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் சிவசேனாவின் ''சாம்னா'' பத்திரிகையில் உத்தவ் பால் தாக்கரே கூறியிருப்பதாவது, சிவசேனா அணியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே இன்று அளித்த பேட்டியில், ஏக்நாத் ஷிண்டேயை நம்பி அணி தாவிய 22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்களை பா.ஜ, மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், அடிமையாக இருப்பது போல் உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.விரைவில் அவர்கள் ஏக்நாத் ஷிண்டேயிடமிருந்து விடுபட்டு எங்கள் பக்கம் வர தயாராகி வருகின்றனர் . இவ்வாறு அதில் உத்தவ் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள், எங்கள் அணியில் இணைய தயாராக உள்ளனர் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில், உத்தவ்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
-->