வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கங்கை நிதியில் வீசப்போவதாக பதக்கங்களுடன் சென்ற மல்யுத்த வீரர்கள், நாடகம் நடத்தியுள்ளனர் என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேல் டில்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தின் உச்சமாக இன்று தங்களின் பதக்கங்களை ஹரிதுவார் கங்கை நதியில் வீசி எறிய போவதாக அறிவித்து அங்கு ஒன்று கூடினர்.
![]()
|
அப்போது விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத் தலைமையிலான விவசாய அமைப்புகள் அவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். 5 நாள் அவகாசம் கேட்டதையடுத்து பதக்கங்களை வீசி எறியும் போராட்டத்தை தள்ளி வைத்தனர்.
இது குறித்து பிரிஜ் பூஷன் அளித்த பேட்டியில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வீசி எறிய போவதாக முடிவு எடுத்தனர். அதனை ஏன் விவசாய சங்க தலைவரிடம் ஒப்படைத்தனர். எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. அவர்கள் திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியுள்ளனர்.