குன்னூர் : கேத்தி பாலாடா அருகே அதிவேகத்தில் பைக்கில் வந்த இரு கல்லூரி மாணவர்கள் லாரிக்கடியில் சென்று டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் பாய்ஸ்கம்பெனி பகுதியை சேர்ந்த சாலமன் என்பவரின் மகன் ரித்திக் சேவியர், 21.
கோத்தகிரியை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் ரிட்சன், 21.கேத்தி சி.எஸ்.ஐ., இன்ஜினியரிங்கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த, இருவரும் இன்று மாலை தேர்வை முடித்து, பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர்.
அதே போல், கேத்தி பாலாடாவிலிருந்து, கேரட் மூட்டைகள் ஏற்றி சென்னைக்கு லாரி சென்று கொண்டிருந்தது.பிரகாசபுரம் அருகே பைபிள் காலேஜ் பகுதியில், மாலை 4:30 மணியளவில் வேகமாக சென்ற பைக், லாரிக்கடியில் சென்று டயரில் சிக்கி விபத்துக்குள்ளானது,இதில் இவரும் உடல், தலை நசுங்கி, சம்பவு இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இருவரும் ஹெல்மெட் அணியாமலும், அதிவேகத்தில் சென்றதாலும் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் ரித்திக் கடந்த மாதம் நடந்த கால்பந்து போட்டியில் சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு செய்து பரிசு கோப்பை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.