வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...
கி.ராமசுப்ரமணியன், ஆசிரியர் (-பணி நிறைவு), புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சென்னை ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பாகுபாடானது.
'பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை பின்பற்றப்படாதது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாதது போன்ற மிகச்சிறிய காரணங்களுக்காக, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
![]()
|
இருந்தும், 'நீங்கள் என்ன சொல்வது, நாங்கள் என்ன கேட்பது' என்ற அடாவடி குணத்தாலும், மத்திய அரசு என்ன சொன்னாலும், அதற்கு செவி மடுக்கக் கூடாது என்ற ஆணவப் போக்காலும், குறைபாடுகளை களைய தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை; அதனால், அங்கீகாரம் ரத்தாகி உள்ளது.
இருந்தும், தமிழக அரசின் தப்பை மறைத்து, வரும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, மத்திய அரசு பாகுபாட்டுடன் செயல்படுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியிருப்பது அபத்தமானது.
![]()
|
புதுச்சேரியில், பா.ஜ., - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் உள்ளது; இருப்பினும், அங்கும் இதே போன்ற நடவடிக்கையே எடுக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, உண்மை நிலவரங்களை மறைத்து அமைச்சர் குற்றம் சாட்டியிருப்பதும், தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாட்டில் பாகுபாடு இல்லை என்பதும் தெளிவாகிறது.
தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புகளில், 650 மாணவர்கள் சேர முடியாத நிலை உருவானதற்கு, திராவிட மாடல் அரசின் செயலற்ற தன்மையே காரணம். 'விடியல் அரசு' என, பெருமை பேசுவோரின் லட்சணம் இது தான்.