'ஸ்வீட் எடு, கொண்டாடுன்னு, மூத்த அமைச்சர்கள் குஷியா இருக்காங்க பா...''என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மதுவிலக்கு மற்றும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீடு, அவருக்கு நெருக்கமானவங்க வீடுகள்ல, ஐ.டி., 'ரெய்டு' நடந்துச்சே... வளமான ரெண்டு துறைகளை, அவரிடம் முதல்வர் கொடுத்தப்பவே, சீனியர் அமைச்சர்கள், 'நறநற'ன்னு பல்லை கடிச்சாங்க பா...
''இப்ப, செந்தில் பாலாஜி தரப்பு சோதனையில சிக்கியதும், அவங்களுக்கு சந்தோஷம் தாங்க முடியலை... இது சம்பந்தமா கருத்து கேட்க வந்த பத்திரிகையாளர்களிடம், சோதனைக்கு கண்டனம் கூட தெரிவிக்காம, சில அமைச்சர்கள் ஓட்டம் பிடிச்சிட்டாங்க...
![]()
|
''இன்னும் ரெண்டு சீனியர் அமைச்சர்கள், கொடைக்கானலுக்கு போய் சொகுசு பங்களாவுல தங்கி, இதை சத்தமில்லாம கொண்டாடி தீர்த்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''நாளைக்கு இதே சோதனை, அவாளுக்கும் வராம போயிடுமா என்ன...'' என்றார் குப்பண்ணா.