'சமூக ஊடகங்களை பயன்படுத்தி நீதிபதிகளை இழிவுபடுத்த கூடாது'
'சமூக ஊடகங்களை பயன்படுத்தி நீதிபதிகளை இழிவுபடுத்த கூடாது'

'சமூக ஊடகங்களை பயன்படுத்தி நீதிபதிகளை இழிவுபடுத்த கூடாது'

Updated : மே 31, 2023 | Added : மே 31, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி :'சமூக ஊடகங்களை பயன்படுத்தி, நீதித் துறை அதிகாரிகளை யாரும் இழிவுபடுத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் ரகுவன்ஷி என்பவர், கோவில் தொடர்பான விவகாரத்தில், மாவட்ட நீதிபதி குறித்து, சமூக வலைதளமான 'வாட்ஸ் ஆப்'பில், ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
Dont use social media to defame judges   'சமூக ஊடகங்களை பயன்படுத்தி நீதிபதிகளை இழிவுபடுத்த கூடாது'

புதுடில்லி :'சமூக ஊடகங்களை பயன்படுத்தி, நீதித் துறை அதிகாரிகளை யாரும் இழிவுபடுத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் ரகுவன்ஷி என்பவர், கோவில் தொடர்பான விவகாரத்தில், மாவட்ட நீதிபதி குறித்து, சமூக வலைதளமான 'வாட்ஸ் ஆப்'பில், ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.


latest tamil news


இந்த விவகாரத்தில், தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரித்த ம.பி., உயர் நீதிமன்றம், கிருஷ்ண குமார் ரகுவன்ஷிக்கு, 10 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, கிருஷ்ண குமார் ரகுவன்ஷி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

உச்ச நீதிமன்றத்திற்கு சட்டப்படி முடிவு எடுக்க வந்துள்ளோம்; கருணை காட்ட வரவில்லை.

நீதிபதி குறித்து அவதுாறு தெரிவிப்பதற்கு முன், மனுதாரர் யோசித்திருக்க வேண்டும். நீதிபதியின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பை பற்றி சிந்தியுங்கள்.

சாதகமான உத்தரவு கிடைக்காததால், நீதித் துறையை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. இந்த வழக்கு, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

Sathyam - mysore,இந்தியா
31-மே-202309:56:04 IST Report Abuse
Sathyam You SC Judges and rest other judges of India, just shut your nasty mouth, get out or get lost if you cannot perform and unable to give productiviity or justice.
Rate this:
Cancel
Sathyam - mysore,இந்தியா
31-மே-202309:33:29 IST Report Abuse
Sathyam Instead of giving lecture and advising others you(SUPREME QUOTA) please agree to NJAC bill formed by GOI. First you guys get out of the tainted Collegium tem which is full of flaws and corrupt. Before you give lecture and interfere in all goverment bills or laws you first improve your self before you point fingers at others. First of all you are all under the impression that you need to be called my lords why the hell this old British tem, you first come out of colonial slave culture. You are also like command citiznes and you are also accoun and anserable to citizens of the nation as you get salaries and other perks only due to tax paying citizens. You first come under RTI act and fist prove yourself transparent before you advice on getting evidence or documents in sealed covers Dont you have basic comman sense if a sealed cover report is giving bv IB/RAW or other investigating agencies it has to be giving sealed cover and not put banners or poster infront of supreme court. I dont know what mindset you guys have and 95 % of citizens in this country have lost faith in judicial tem and police. First you bring out judicial reforms and concentrate focus on pending 5 croro cases before giving advicing or giving lectures
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
31-மே-202309:05:50 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த நாட்டில் நீதிபதிகள் நீதிபதிகளாக செயல்படாமல் அரசாங்கத்தில் உள்ள குற்றவாளிகளை காப்பாற்ற கட்ட பஞ்சாயத்து செய்கின்றனர்.உச்ச நீதிமன்றத்தின் பெயராலேயே இவ்வாறு செய்கின்றனர்.இந்த நிலை மாறினால் மட்டுமே அவர்களை மதிப்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X