மும்பை, மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த ஒரே லோக்சபா எம்.பி.யான பாலு தானோர்கர், 47, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
மஹாராஷ்டிராவின் சந்திரபூர் லோக்சபா தொகுதியில் 2019ல் காங்., சார்பில் பாலு தானோர்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மஹாராஷ்டிராவில் இவர் மட்டுமே காங்., கட்சியின் சார்பில் லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறுநீரக பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்காக புதுடில்லியில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான வரோராவுக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன.
தானோர்கரின் தந்தை கடந்த, 27ல் காலமான நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில் இவரும் இறந்துள்ளது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மஹாராஷ்டிராவிலிருந்து ராஜ்யசபாவுக்கு காங்., சார்பில் மூன்று எம்.பி.,க்கள் உள்ளனர்.