வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : புதிய ரேஷன் கார்டு வாங்க 'ஆதார்' எண் அவசியம். அதேபோல் கூடுதலாக பெயர்களை சேர்க்கவும் ஆதார் கட்டாயம். இதில் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெயரை சேர்க்க மட்டும் ஆதார் தேவையில்லை.
அதற்கு பதிலாக அக்குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். ஐந்து வயதானதும் குழந்தைக்கு ஆதார் எண் பெற்று அதை ரேஷனில் இணைக்க வேண்டும் என்பது நடப்பில் உள்ள விதிமுறை.
இந்நிலையில் ஆதார் கார்டு இல்லாத குழந்தைகளின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து 'ஆதார் இணைக்க வேண்டிய குழந்தைகளின் பெற்றோர்களை நேரிலோ அலைபேசியிலோ தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும்; பெயரை நீக்க கூடாது; பெற்றோர்களும் குழந்தையின் ஆதார் எண் இணைக்க முன்வர வேண்டும்' என்று அதிகாரிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.